Enable Javscript for better performance
சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    சிவகாசி: பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலி

    By DIN  |   Published on : 18th May 2018 05:57 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த விஸ்வநத்தம் பகுதியில் இயங்கி வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

    விஸ்வநத்தம் பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று மாலை இடி தாக்கியது. இதனால் ஏற்பட்ட வெடிவிபத்தில் பட்டாசு தயாரிப்பு அறை இடிந்து விழுந்து தரைமட்டமானது.

    இந்த விபத்தில் பட்டாசு தயாரிப்பு அறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒரு தொழிலாளி உயிரிழந்தார். சம்பவம் குறித்து அறிந்ததும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai