Enable Javscript for better performance
சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மேலும் உயர்வு- Dinamani

சுடச்சுட

    
    petrol

    சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. 

    'கர்நாடக தேர்தலைக் கருத்தில் கொண்டு, 19 நாட்களாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4 வரை உயர்த்தப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு 500 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டதாகவும், தற்போது தேர்தல் முடிந்து விட்டதால், வரும்காலத்தில் பெட்ரோல், டீசல் விலை ரூ.4 வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளது'' என்று நிதி ஆலோசனை நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.

    இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 40 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 31 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 

    இதனால், சென்னையில் நேற்று 78 ரூபாய் 16 காசுகளுக்கு விற்கப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல், இன்று 78 ரூபாய் 46 காசுகளுக்கும், நேற்று 70 ரூபாய் 49 காசுகளுக்கு விற்பனையான ஒரு லிட்டர் டீசல், இன்று 70 ரூபாய் 80 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

    நிதி ஆலோசனை நிறுவனமான கோடக் இன்ஸ்டிடியூஷனல் இக்விட்டிஸ் கூறுகையில், 'சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப, இந்தியாவில் வரும் வாரங்களில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.5 முதல் ரூ.4 வரையிலும் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இதேபோல், பெட்ரோலின் விலையும் லிட்டருக்கு ரூ.4 முதல் ரூ.4.55 வரையிலும் உயர்த்தப்படலாம்' என்று குறிப்பிட்டுள்ளது.

    ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனமும், பெட்ரோல், டீசல் விலை அண்மையில் சுமார் 3 வாரங்களாக உயர்த்தப்படாமல் இருந்த காரணத்தினால், அதன் விலையில் லிட்டருக்கு 31 காசுகள் வரை இழப்பு ஏற்படுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai