Enable Javscript for better performance
ஜூலை 20 முதல் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் அறிவித்துள்ள லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்தார். 
    டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் முறையைக் கைவிட வேண்டும். சுங்கச் சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையைக் கொண்டு வரவேண்டும். 
    மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 20 ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் புதுதில்லியில் வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவிக்கிறோம். இந்தப் போராட்டத்தில் தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai