Enable Javscript for better performance
தங்கம் பவுனுக்கு ரூ.136 குறைந்தது- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.136 குறைந்து, ரூ.23,600-க்கு விற்பனையானது.
    சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம் ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. வியாழக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.17 குறைந்து ரூ.2,950-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து ரூ.42.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து ரூ.42,800 ஆகவும் இருந்தது.
    வியாழக்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
    1 கிராம் தங்கம் 2,950
    1 பவுன் தங்கம் 23,600
    1 கிராம் வெள்ளி 42.80
    1 கிலோ வெள்ளி 42,800
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai