Enable Javscript for better performance
தினமணி செய்தி எதிரொலி : கருவூலத் துறையில் பதவி உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    தினமணி செய்தி எதிரொலி காரணமாக, கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. முதன்மை கணக்கு அலுவலர்களாக உள்ள சுமார் 20 -க்கும் மேற்பட்டோருக்கு இணை இயக்குநராக பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்கும் பணியை கருவூலம் மற்றும் கணக்குத் துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், இத்துறையில் பதவி உயர்வுகள் வழங்கப்படாதது தொடர்பாக 'தினமணி'யில் அண்மையில் செய்தி வெளியானது.
    இதைத் தொடர்ந்து பதவி உயர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. முதன்மை கணக்கு அலுவலர்களாக உள்ள 20 -க்கும் மேற்பட்டோருக்கு இணை இயக்குநர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் அண்மையில் பிறப்பித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai