Enable Javscript for better performance
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்- Dinamani

சுடச்சுட

    
    fish

    பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரியவகையான சூரிய மீன்.

    பாம்பன் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரிய வகையான சூரிய மீனை வியாபாரிகள் போட்டி போட்டு புதன்கிழமை வாங்கி சென்றனர். 
    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடற்பகுதியில் சுமார் 2700 க்கும் மேற்பட்ட அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. இந்நிலையில், மிகவும் அரிய வகை மீனான சூரிய மீன் இங்கு காணப்படுகிறது. இந்த மீன்கள் பெரும்பாலும் மீனவர் வலைகளில் சிக்குவது கிடையாது. 
    இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பாம்பன் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற நாட்டுப்படகு மீனவர்கள் வலையில் சூரிய மீன் சிக்கியது. இதனை மறுநாள் கரைக்கு கொண்டு வந்தபோது பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து பார்த்தனர். சிறிய வாய், துடுப்பு போன்ற உடல் அமைப்பு, வால் பகுதி இல்லாமல் காணப்படும் இந்த சூரிய மீன் அதிக சுவை உள்ளதால் மீன் வியாபாரிகள் ஆர்வத்துடன் இதை வாங்கிச் சென்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai