Enable Javscript for better performance
'பிளிப்கார்ட்-வால்மார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்'- Dinamani

சுடச்சுட

    

    'பிளிப்கார்ட்-வால்மார்ட் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்'

    By DIN  |   Published on : 18th May 2018 04:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உள்நாட்டு வணிகத்தை பாதிக்கக்கூடிய பிளிப்கார்ட்-வால்மார்ட் இடையேயான ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வலியுறுத்தினார்.
    இந்திய சில்லறை வர்த்தகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களின் நேரடி முதலீட்டை அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சென்னையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வணிகர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
    இதுகுறித்து வணிகர் சங்க பேரவையின் தலைவர் த.வெள்ளையன் செய்தியாளர்களிடம் கூறியது:- 
    அமெரிக்காவின் 'வால்மார்ட்' நிறுவனம், இந்தியாவில் 'பிளிப்கார்ட்' நிறுவனத்துடன் இணைந்து தொழில் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தால் சில்லறை வணிகம் சரிந்து, நாட்டின் பொருளாதாரமே பாதிக்கும்.
    'ஆன்-லைன்' வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு உற்பத்தியாளர்கள் குறைந்த விலையில் பொருள்களை வழங்குவதால்தான், மக்களுக்கு சலுகை விலையில் பொருள்களை விற்பனை செய்ய முடிகிறது. இது நீடித்தால் ஒருகாலத்தில் சில்லறை வணிகம் அழிந்து, விரும்பிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்யும் உரிமையை 'ஆன்-லைன்' வர்த்தகம் பெற்றுவிடும். இது நாட்டுக்கே பெரிய கேடாக அமையும்.
    எனவே உள்நாட்டு வணிகத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய -மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். வால்மார்ட்-பிளிப்கார்ட் ஒப்பந்தத்தால் ஒரு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படலாம். 
    ஆனால், பல கோடி சில்லறை வணிகர்கள் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும். எனவே, இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai