Enable Javscript for better performance
புதுமுக நடிகை தன்யாவுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்புக்கோரி ஆணையரிடம் மனு- Dinamani

சுடச்சுட

    

    புதுமுக நடிகை தன்யாவுக்கு கொலை மிரட்டல்: பாதுகாப்புக்கோரி ஆணையரிடம் மனு

    By DIN  |   Published on : 18th May 2018 11:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dhanya

    புதுமுக நடிகை தன்யா, தனக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நள்ளிரவில் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்துள்ளதை அடுத்து, உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். 

    "போர்களத்தில் ஒரு பூ" என்ற தமிழ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் தன்யா. அவர் நடிப்பில் உருவான "18.5.2009" என்ற திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் வெளியாக உள்ளது. 

    இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று, அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக, நள்ளிரவு 1 மணிக்கு போன் செய்து ஆபாச வார்த்தைகளால் பேசியதாகவும், தன்னை கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டியதாகவும் புகார் மனுவில் கூறியுள்ளார். 

    மேலும் தனக்கு வந்த போன் மிரட்டலால், நானும் எனது தாயும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பயத்தோடு வாழ்ந்து வரும் எங்களுக்கு, பாதுகாப்பு அளித்து, மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai