Enable Javscript for better performance
பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    
    nirmaladevi

    பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

    அருப்புக்கோட்டை தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித உதவி பேராசிரியையாக இருந்தவர் நிர்மலாதேவி (50). இவர் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசியதான உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

    இந்த நிலையில் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்திருந்தனர். 

    இம்மனு ஸ்ரீவில்லிபுத்தூர் விடுமுறை கால நீதிமன்ற நீதிபதி சிங்கராஜ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நிர்மலா தேவியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai