Enable Javscript for better performance
மது கடத்தல் வழக்கில் கைதான எஸ்.ஐ. பணியிடை நீக்கம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரம் மாவட்டத்தில் மது கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளரைப் பணியிடை நீக்கம் செய்து, எஸ்.பி. ஜெயக்குமார் நடவடிக்கை மேற்கொண்டார்.
    விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் மது விலக்கு சோதனைச் சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ராஜ்குமார்(55). இவர், தனது ஓய்வு நாளான புதன்கிழமை புதுச்சேரியிலிருந்து காரில் மற்றொருவருடன் இணைந்து மதுப் புட்டிகளை கடத்திக் கொண்டு சென்னைக்குச் செல்ல முயன்றபோது, விழுப்புரம் அருகே மதுவிலக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மதுப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
    இந்த நிலையில், ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai