Enable Javscript for better performance
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை விவகாரம்: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவு

    By DIN  |   Published on : 18th May 2018 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இனிவரும் காலங்களில் முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு ஏற்ற பகுதிகளைக் கண்டறிய, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    அரசாணை ரத்தும் மேல்முறையீடும்: முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர தொலைதூர பகுதிகள் மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் சலுகை மதிப்பெண் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் 2018-19 -ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக அரசு மருத்துவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தொலைதூர பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த மார்ச் 23 -ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.
    இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியாற்றும் பிரவீன் உள்ளிட்ட 4 பேர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன், தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரி தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
    இந்த மனு நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், வழக்குரைஞர் ரிச்சர்ட் வில்சனும், அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞர் சி.மணிசங்கர், டி.என்.ராஜகோபாலனும் ஆஜராகி வாதிட்டனர்.
    அரசாணை செல்லும்: அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
    தமிழக அரசின் அரசாணைப்படி, மாவட்ட, தாலுகா மருத்துவமனைகளில் உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு, தாய் சேய் நலம் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு (சீமாங்), என்ஐசியு, எஸ்என்சியு உள்ளிட்ட குழந்தைகள் நலப்பிரிவில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள் இந்தச் சலுகை மதிப்பெண்ணைப் பெற முடியாது.
    இந்த பிரிவில் பணியாற்றில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்குவது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது. எனவே, இந்த வகைப்பாட்டினை மட்டும் ரத்து செய்கிறோம். அதாவது, நிகழ் கல்வியாண்டில் (2018 - 19) முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு தனி நீதிபதி ரத்து செய்த அரசாணையில், மேற்குறிப்பிட்ட வகைப்பாட்டினை மட்டும் ரத்து செய்கிறோம். 
    மற்றபடி இந்த அரசாணை செல்லும். இனிவரும் காலங்களில் இதுபோன்ற சிக்கல்களைத் தவிர்க்கவும், சலுகை மதிப்பெண் வழங்குவதற்கு ஏற்ற பகுதிகளைக் கண்டறியவும், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து முடிவு செய்ய வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai