Enable Javscript for better performance
வன்கொடுமை தடுப்புச் சட்டம்: நீதிமன்றத் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு- Dinamani

சுடச்சுட

    

    வன்கொடுமை தடுப்புச் சட்டம்: நீதிமன்றத் தீர்ப்புக்கு ராமதாஸ் வரவேற்பு

    By DIN  |   Published on : 18th May 2018 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
    வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அந்தத் தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது.
    அந்த மனு மீதான விசாரணையின்போது, 'வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி, எந்தத் தவறும் செய்யாத அப்பாவி ஒருவரை எந்தவிதமான விசாரணையும் இன்றி கைது செய்து சிறையில் அடைக்க முடியும் என்றால், நாம் நாகரிகமான சமுதாயத்தில் வாழவில்லை என்றுதான் பொருள்' என உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.கோயல் கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பில் எவரும் குறை காண முடியாது. 
    இந்தச் சட்டத்தின் தவறான பயன்பாட்டால், தேசிய அளவில் தலித் அல்லாதோர் பழிவாங்கப்படுகின்றனர். இந்த நிலையில், 'வன்கொடுமைச் சட்டத்தில் அளிக்கப்படும் புகார் மனுக்கள் மீது விசாரணை நடத்திய பிறகுதான் யாரையும் கைது செய்ய வேண்டும். வழக்கில் முன் ஜாமீன் வழங்க வகை செய்ய வேண்டும்' என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வது, ஒன்பதாவது அட்டவணையில் இந்த சட்டத்தைச் சேர்ப்பது போன்ற தவறான முடிவுகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai