பட்டாசு தயாரிக்கும் மூலப்பொருளுக்கு தடை: தீபாவளிக்கு பின்னர் ஆலைகளை திறப்பது கடினம்; பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்கம்

பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தீபாவளிக்கு பின்னர், மீண்டும் பட்டாசு ஆலைகளை திறப்பது கடினம் என

பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூலப் பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் தீபாவளிக்கு பின்னர், மீண்டும் பட்டாசு ஆலைகளை திறப்பது கடினம் என தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர் சங்க பொதுச் செயலர் மாரியப்பன் தெரிவித்தார்.
 இதுகுறித்து அவர் புதன்கிழமை கூறியதாவது: உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு காரணமாக கடந்தாண்டை விட நிகழாண்டு பட்டாசு உற்பத்தி 40 சதவீதம் குறைந்துள்ளது. உச்சநீதிமன்றம், 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதனால், நிகழாண்டு பட்டாசு விற்பனையும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை தீபாவளி கொண்டாடப்பட்டது. ஆனால், வட மாநிலங்களில் புதன்கிழமை தான் கொண்டாடப்படும். அங்கு பட்டாசு விற்பனை, போலீஸ் கண்காணிப்பு எந்த நிலையில் இருக்கும் என்பதைப் பொருத்து தான் கூற முடியும். தற்போது, பட்டாசு உற்பத்திக்கு முக்கிய மூல பொருளான பேரியம் நைட்ரேட் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இந்த மூலப்பொருளை கொண்டு தான், கம்பி மத்தாப்பு, பென்சில், சக்கரம், பூச்சட்டி செய்ய முடியும். நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், இது போன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்வதில் 60 சதவீதம் பாதிப்பு ஏற்படும். மேலும், வாலா போன்ற வெடிகள் தயாரிக்க முடியாமல் 20 சதவீதம் பாதிப்பு ஏற்படும். எனவே, 80 சதவீத வெடிகளை தயாரிக்க முடியாது. தீபாவளி முடிந்து ஒரு மாதத்துக்குப் பின்னர் அனைத்து பட்டாசு ஆலைகளிலும் உற்பத்தி தொடங்குவது வழக்கம். ஆனால், மூலப் பொருள் தடை காரணமாக 80 சதவீத வெடிகள் தயாரிக்க முடியாததால், ஆலைகளை திறப்பது மிகவும் கடினம். இதனால், பட்டாசு தொழில் பாதிப்பதுடன் 8 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும். இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வதற்கும் வாய்ப்பில்லை. எனவே, பட்டாசு ஆலைகளை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com