சர்கார் பட விவகாரத்தில் திரைப்படத்திற்கு எதிரான செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்: ரஜினி

சர்கார் பட விவகாரத்தில் திரைப்படத்திற்கு எதிரான செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். 
சர்கார் பட விவகாரத்தில் திரைப்படத்திற்கு எதிரான செயல்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்: ரஜினி

சர்கார் பட விவகாரத்தில் திரைப்படத்திற்கு எதிரான செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாக நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார். 

விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படம் தீபாவளியன்று வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்த படத்தில் நிறைய அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் உள்ளன. இந்த நிலையில் சர்கார் படத்திற்கு எதிராக தமிழகம் முழுக்க அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கி இருக்கிறார்கள். படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர்கள் போராடி வருகிறார்கள். 

திரையரங்குகளுக்கு முன் ஆர்ப்பாட்டம், பேனர் கிழிப்பு, திரையரங்குகளில் அரசு அதிகாரிகள் ஆய்வு, காட்சிகள் ரத்து என அடுத்தடுத்து எதிர்ப்புகள் வெவ்வேறு வடிவங்களில் வந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து அதிமுக போராட்டத்திற்கு பணிந்து, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தயாரிப்பு தரப்பு முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பதிவில், தணிக்கைக்குழு தணிக்கை செய்து படத்தை வெளியிட்ட பிறகு, அந்தப் படத்திலிருந்து சில காட்சிகளை நீக்கவேண்டும் என்று போராட்டம் நடத்துவதும், திரையிடத் தடுப்பதும்,படத்தின் பேனர்களை சேதப்படுத்துவதும், சட்டத்திற்குப் புறம்பான செயல்கள். இத்தகைய செயல்களை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com