மு.க.ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு

பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்திக்க உள்ளார்.
மு.க.ஸ்டாலினுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு

பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெள்ளிக்கிழமை சந்திக்க உள்ளார்.
 மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் பாஜகவுக்கு எதிராக அரசியல் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.
 அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், கர்நாடக முதல்வர் குமாரசாமி ஆகியோரைச் சந்தித்து சந்திரபாபு நாயுடு ஆதரவு திரட்டினார். அதன் தொடர்ச்சியாக மு.க.ஸ்டாலினைச் சந்திக்க உள்ளார்.
 ஸ்டாலின் இல்லத்தில்...சென்னை ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது. அப்போது பாஜகவுக்கு எதிராக கூட்டணியை உருவாக்குவது குறித்து மு.க.ஸ்டாலினிடம் சந்திரபாபு நாயுடு பேச உள்ளார்.
 சீதாராம் யெச்சூரி விரைவில் சந்திப்பு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியப் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரியும் மு.க.ஸ்டாலினை நவம்பர் 13-ஆம் தேதி சந்தித்து பேச உள்ளார். பாஜகவுக்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் சீதாராம் யெச்சூரியும் ஈடுபட்டு வருகிறார். அதன் அடிப்படையில் ஸ்டாலினைச் சந்திக்க உள்ளார்.
 பாஜகவுக்கு எதிர்ப்பு: திமுகவைப் பொருத்தவரை பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டில்தான் இருந்து வருகிறது. பாஜகவைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போட்டியிடவும் திமுக தயாராகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com