தலைவர்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள்: முதல்வர் பழனிசாமி

தலைவர்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள். தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் 
தலைவர்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள்: முதல்வர் பழனிசாமி


கோவை: தலைவர்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள். தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் அந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பவனிசாமி தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் கட்சிக்கும் ஆட்சிக்கும் பெரும் துரோகம் இழைத்துவிட்டனர். 18 எம்.எல்.ஏ.க்களால் தான் அவர்களின் தொகுதி முடக்கப்பட்டுள்ளது. துரோகம் செய்த காரணத்தால்தான் அவர்களுக்கு இறைவன் தக்க பாடம் புகட்டியுள்ளார். 18 தொகுதிகள் மட்டுமின்றி 234 தொகுதிகளிலும் அனைத்து வளர்ச்சிப்பணிகளும் நடைபெற்று வருகின்றன. அதிமுகவிற்கு முதல் துரோகி டிடிவி தினகரன் தான். அதிமுகவை உடைக்கும் பணியில் எதிரிகளுடன் சேர்ந்து ஈடுபட்டு வருகிறார். 

ஆந்தி முதல்வர் சந்திரபாபு நாயுடும் - திமுக தலைவர் ஸ்டாலினும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது பாலாறு தடுப்பணை பிரச்னை குறித்து பேரவையில் கேள்வி எழுப்பும் ஸ்டாலின், தமிழக நலன் கருதி பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக கேட்டாரா?, தமிழகத்திற்கு ஆந்திரா தர வேண்டிய தண்ணீர் குறித்து ஏதேனும் பேசினாரா? என்றும் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த போது, அது மதவாதக் கட்சி என திமுகவுக்கு தெரியவில்லையா?, தலைமை செயலக வழக்கில் திமுக தடை ஆணை கேட்பது ஏன்? மடியில் கனம் இல்லை என்றால் தைரியமாக வழக்கை எதிர்கொள்ள வேண்டியது தானே? திமுகவினருக்கு மக்களை பற்றி கவலையில்லை, அவர்களுக்கு தேவை அதிகாரம் மட்டுமே.

தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை பெறுவதற்காக மத்திய அரசோடு இணக்கமாக உள்ளோம். தமிழகத்திற்கு யார் நன்மை செய்கிறார்களோ அவர்களுடன் கொள்கையுணர்வுடன் தான் நாங்கள் கூட்டணி வைப்போம். ஆனால் திமுக சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்ளும் என்றார். 

தலைவர்களின் விலையில்லா திட்டங்களை சர்கார் திரைப்படத்தில் அவமதித்திருக்கிறார்கள். இதனை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தலைவர்களை கொச்சைப்படுத்தினால், தொண்டர்கள் கொதித்து எழத்தான் செய்வார்கள். தொண்டர்களோடு சேர்ந்து பொதுமக்களும் போராடியதால் தான் அந்த படத்தில் சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கினார்கள். தற்போது அந்த திரைப்பட பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது; மேலும் மேலும் பெரிதுபடுத்த வேண்டாம் என்றவர் சில நடிகர்கள் தங்களை வளமாக்கி கொள்ள திட்டமிட்டு தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். ரூ.300 கோடி, ரூ.500 கோடி என முதலீடு செய்து திரைப்படம் எடுப்பவர்களுக்கு பணம் எங்கிருந்து, எப்படி வந்தது?. திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா திட்டத்தால் பயன் பெற்றிருப்பார்கள் ஊடகங்கள் இதனை தெளிவுப்படுத்த வேண்டும். முதல்வர், ரூ.100 திரைப்பட டிக்கெட் கட்டணங்களை ரூ.1000க்கு விற்று ரசிகர்களின் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள். இதுபோன்று கூடுதலாக கட்டணம் வசூலித்து வருவது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.

தனது படத்திற்கு பிரச்னை வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமல், எப்படி மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார்? வயதான கமலுக்கு திரையுலகில் ஓய்வு வழங்கப்பட்டு விட்டது. தற்போது அவர் அரசியலில் நடிக்க துவங்கியுள்ளார், அவரது நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 

மேலும், காய்ச்சல் வந்ததும் அரசு மருத்துவமனையை அணுகினால், நிச்சயம் டெங்குவை கட்டுப்படுத்தலாம். டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை என்றார் முதல்வர் பழனிசாமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com