அரக்கோணம் யார்டில் பராமரிப்புப் பணி: ரயில் சேவையில் இன்றும், நாளையும் மாற்றம்

அரக்கோணம் யார்டில் மின்னணு பொறியியல் பணி நடப்பதால், இன்றும் (நவம்பர் 11), நாளையும் (நவம்பர் 12) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அரக்கோணம் யார்டில் மின்னணு பொறியியல் பணி நடப்பதால், இன்றும் (நவம்பர் 11), நாளையும் (நவம்பர் 12) ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது.
 ஞாயிற்றுக்கிழமை சேவையில் மாற்றம் செய்யப்படும் ரயில்கள்: சென்னை சென்ட்ரல்-கோவைக்கு இயக்கப்படும் கோவை விரைவு ரயில், திருவாலங்காட்டில் 115 நிமிஷம் நின்று செல்லும்.
 சென்னை சென்ட்ரல்-ஈரோடுக்கு இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில், திருவாலங்காட்டில் 170 நிமிஷம் நின்று செல்லும்.
 சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆர் பெங்களூருக்கு இயக்கப்படும் பெங்களூரு மெயில், கடம்பத்தூரில் 140 நிமிஷம் நின்று செல்லும்.சென்னை சென்ட்ரல்-யஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் யஸ்வந்த்பூர் விரைவு ரயில் திருவாலங்காட்டில் 115 நிமிஷம் நின்று செல்லும்.சென்னை சென்ட்ரல்-மும்பை சிஎஸ்டி-க்கு இயக்கப்படும் மும்பை சிஎஸ்டி மெயில், திருவள்ளூரில் 105 நிமிஷம் நின்று செல்லும். மும்பை சிஎஸ்டி-சென்னை சென்ட்ரலுக்கு இயக்கப்படும் சென்ட்ரல் மெயில் அரக்கோணத்தில் 15 நிமிஷம் நின்று செல்லும்.
 பகுதி ரத்து: மூர்மார்க்கெட் வளாகத்தில் இருந்து அரக்கோணத்துக்கு இரவு 10.10, 10.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூர்-அரக்கோணம் இடையே பகுதி ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து திருவள்ளூர் வரை மட்டும் இயக்கப்படும்.
 திங்கள்கிழமை சேவையில் மாற்றப்படும் ரயில்கள்:
 சென்னை சென்ட்ரல்-ஈரோடுக்கு இயக்கப்படும் ஏற்காடு விரைவு ரயில் திருவாலங்காட்டில் 180 நிமிஷம் நின்று செல்லும். இதுதவிர, மேலும் சில ரயில்களின் சேவையில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது.
 இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com