சந்திரபாபு-ஸ்டாலின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படாது

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சந்திரபாபு-ஸ்டாலின் சந்திப்பால் அரசியல் மாற்றம் ஏற்படாது

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இடையேயான சந்திப்பு அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
 பண மதிப்பிழப்பின் நன்மைகள் குறித்த கருத்தரங்கம் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு தமிழிசை அளித்த பேட்டி:-பண மதிப்பிழப்பு தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சி வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற கட்சித் தலைவர் திருநாவுக்கரசரால் பண மதிப்பிழப்பு குறித்து பேசமுடியவில்லை. முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பற்றியே அதிகம் பேசுகிறார். அவர்களுக்கு இடையே உள்ள உட்கட்சி பிரச்னைகளைப் பற்றியே அதிகமாகப் பேசியுள்ளார்.
 சந்திரபாபு நாயுடு சந்திப்பு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சந்தித்துப் பேசினர். இதனால், மிகப் பெரிய கூட்டணி உருவாகி விட்டதாகச் சொல்கிறார்கள். சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பவர்கள் அனைவருமே ஏற்கெனவே கூட்டணியில் கூட்டாக இருப்பவர்கள்தான்.
 ஆனால், ஸ்டாலினை சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசியதால் புதிதாக கூட்டணி அமைந்து விட்டது போன்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் மட்டுமல்ல, இந்திய அரசியலில்கூட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com