கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல்

நாகை - வேதாரண்யம் இடையே அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த கஜாவின் சீற்றத்தால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மிக கடுமையான
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாகை - வேதாரண்யம் இடையே அதிதீவிர புயலாகக் கரையைக் கடந்த கஜாவின் சீற்றத்தால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் மிக கடுமையான சேதத்துக்குள்ளாகியுள்ளன. புயலின் சீற்றத்தில் சிக்கி இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர், 15 ஆயிரத்துக்கும் மேலான வீடுகள், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் சாய்ந்தும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான தென்னை, வாழை மரங்கள் சாய்ந்தன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள்  சேதமடைந்துள்ளன

வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை அதிகாலை வரை நாகை மாவட்டத்தை புரட்டிப் போட்ட கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களின் தாக்கத்திலிருந்து மக்கள் விடுபட சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகும் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆறுதல்களை தெரிவித்து கொள்வதாக நடிகர் ரஜினிகாந்த் டிடுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல உதவிகளைச் செய்துவரும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை பாராட்டுவதாக கூறியுள்ளார். மேலும் நமது நிவாரண உதவிகள் தொடரட்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com