ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் 

ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்று சென்னை  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 
ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை: நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் 

சென்னை: ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்று சென்னை  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், பதிவு செய்யப்படாத ஆன்லைன் கடைகள் மூலமும் மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு இல்லாமலும் மருந்துகள் விற்பனை செய்வது சட்டவிரோதம். இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தின் மூலம் மருந்துப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பொதுமக்களுக்கு போலியான, தவறான மற்றும் காலாவதியான மருந்துகள் விற்பனை செய்யப்படும். சரியான மருந்து கிடைக்காமல் நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள்.

சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழி மருந்து விற்பனை உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, ஆன்லைன் மருந்து விற்பனையை சட்ட விரோதம் என அறிவித்து, வழக்கு முடியும் வரை ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன் கடந்த 31.10.18 அன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஆன்லைன் மருந்து விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த மனு குறித்து மத்திய-மாநில சுகாதாரத் துறைச் செயலர்கள், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வார காலத்துக்கு ஒத்திவைத்தார். 

இந்நிலையில் ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை என்று சென்னை : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

இந்த வழக்கு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்தது. அதில். 'ஆன்லைன் மருந்து விற்பனையைத் தடுக்கும் அதிகாரம் தங்களிடம் இல்லை; இணையத்தில் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் முழுமையான அதிகாரம் மத்திய அரசிடம்தான் உள்ளது' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதனையடுத்து மத்திய அரசு பதில்மனு தாக்கல் செய்யுமாறு கூறி, இந்த வழக்கானது டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com