கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியினை நேரடியாக கண்டுணர்ந்தோம்: மத்திய குழு பேட்டி 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியினை நேரடியாக கண்டுணர்ந்தோம்: மத்திய குழு பேட்டி 

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியினை நேரடியாக கண்டுணர்ந்தோம் என்று மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார். 

சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியினை நேரடியாக கண்டுணர்ந்தோம் என்று மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்டு தலைமையிலான குழு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்தது. இந்த குழுவில் ஆர்.பி.கவுல், பி.கே.ஸ்ரீவஸ்தவா, மாணிக்க சந்திர பண்டித், வந்தனா சிங்கால் மற்றும் இளவரசன் உள்ளிட்ட 7 அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். 

இதைத் தொடர்ந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய மத்திய குழுவினர், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சனி, ஞாயிறு மற்றும் திங்கள்கிழமைகளில் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, மத்திய குழுவினர் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசீனர். 

இந்தச் சந்திப்புக்குப் பிறகு தில்லி செல்லும் மத்தியக் குழு தங்களது ஆய்வின் அடிப்படையில் அறிக்கையை தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்படும் பரிந்துரைகள் அடிப்படையில், தமிழகத்துக்குத் தேவையான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரிகிறது. 

இந்நிலையில் தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வலியினை நேரடியாக கண்டுணர்ந்தோம் என்று மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமியுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டேனியல் ரிச்சர்டு கூறியதாவது:

தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட  பகுதிகளுக்கு நாங்கள் நேரடியாக சென்று பார்வையிட்டோம், அதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் வலியினை நேரடியாக கண்டுணர்ந்தோம். 

இந்த பகுதிகளில் தென்னை, வாழை , மா மற்றும் பலா உள்ளிட்ட பல்வேறு மரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கூரை வீடுகள், ஓட்டு வீடுகள் ,ஏன் வலுவான கான்க்ரீட் கட்டடங்கள் கூட புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. 

கஜா புயலின் பொருட்டு தமிழக அரசின் சார்பில் எடுக்கப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலுக்குப் பின்னர் செய்யப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் திருப்தியளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com