கஜா புயல் சேதம்: மத்திய குழு 2 நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு  

கஜா புயல் சேதம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள மத்திய குழு 2 நாட்களில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது
கஜா புயல் சேதம்: மத்திய குழு 2 நாட்களில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற கிளை உத்தரவு  

மதுரை: கஜா புயல் சேதம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள மத்திய குழு 2 நாட்களில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

கஜா புயலை பேரிடராக அறிவிக்கக் கோரி மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் இரண்டு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கு குறித்து திங்களன்று தமிழக அரசு சார்பில் நீதிமன்றத்தில் பதில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது:

கஜா  புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு தலா ரூ.1,600ம், சேதமடைந்த படகுகளுக்கு ரூ.4 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.

புயல் பாதித்த  மாவட்டங்களில் 7 பேரிடர் மீட்புக் குழுக்கள் சீரமைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. நகர்ப்புறப் பகுதிகளில் 94 சதவீதம் மின் இணைப்பு சரி செய்யப்பட்டுவிட்டது. கிராமப்புற பகுதிகளில் 64 - 67 சதவீதம் மின் இணைப்பு சரி செய்யப்பட்டது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

அறிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், புயல் நிவாரணம் குறித்து செவ்வாயன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் கஜா புயல் சேதம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள மத்திய குழு 2 நாட்களில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதுதொடர்பாக செவ்வாயன்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை பிறப்பித்த இடைக்கால உத்தரவின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

கஜா புயல் சேதம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள மத்திய குழு 2 நாட்களில் தனது இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். 

அதேபோல தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீது ஒரு வாரத்திற்குள் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

புயலால் பெருமளவில் வீடுகளின் கூரைகள் பாதிக்கப்பட்டிருப்பதால், மக்களுக்கு மாற்று ஏற்பாடாக  கூரைகள் அமைக்க போதுமான அளவில் தார்ப்பாய்கள் வழங்கப்பட வேண்டும்.

அடுத்த கட்டமாக தூய குடிநீர், பால் மற்றும் பிரட் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், விரைவில் அவர்கள்  சமைக்க ஏதுவாக மண்ணெண்ணெய் அடுப்பு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியன விரைந்து கிடைக்க ஆவண செய்ய வேண்டும். 

மின்சாரத்தை சீரமைக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். 

தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைத்து அனுப்பும் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வோருக்கு உரிய பாதுகாபபு வழங்க வேண்டும். 

இவ்வாறு பல்வேறு விஷயங்கள் குறித்து தனது இடைக்கால உத்தரவில் தெளிவு படுத்திய உயர் நீதிமன்றக் கிளையானது, வழக்கினை டிசம்பர் 6 - ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com