புயல் நிவாரணப் பொருள்களை ரயிலில் எடுத்துச் செல்ல டிச. 10 வரை கட்டண விலக்கு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணப் பொருள்களை ரயிலில் கொண்டு செல்வதற்கு கட்டண விலக்கு அளிக்கப்படுவதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கஜா புயலால் தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு ரயில்கள், சரக்கு ரயில்கள், பயணிகள் ரயில்கள் மூலமாக நிவாரணப் பொருள்களை இலவசமாக எடுத்துச் செல்ல இந்திய ரயில்வே அனுமதி அளிக்க முடிவு செய்துள்ளது. 
அதன்படி, நாட்டின் உள்ள எல்லா அரசு அமைப்புகளும் ரயில்களில் நிவாரணப் பொருள்களை இலவசமாக தமிழகத்தில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். மற்ற அமைப்புகள் நிவாரணப் பொருள்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலமாக அனுப்பி வைக்கலாம். மேலும், ரயில்வே கோட்ட மேலாளர் மூலமாகவும் அனுப்பி வைக்கலாம். 
ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் நிவாரணப் பொருள்களுக்கு டிசம்பர் 10-ஆம் தேதி வரையில் சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும் நிவாரணப் பொருள்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
முன்னதாக நிவாரண பொருள்களை சரக்கு ரயிலில் கொண்டு செல்ல கட்டண விலக்கு கோரி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயலுக்கு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com