ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை 

ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 
ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை 

புது தில்லி: ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து அங்கு அமைந்துள்ள சிப்காட்டில் உள்ள நிறுவனங்கள் வணிக நோக்கத்தின் பொருட்டு அதிக அளவு நீரை எடுக்கின்றன. எனவே அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி திமுகவைச் சேர்ந்த வழக்கறிஞரான ஜோயல் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து நீரை எடுக்க ஸ்டெர்லைட் உள்ளிட்ட சிப்காட் நிறுவனங்களுக்கு தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. 

ஜோயல் தொடந்துள்ள வழக்கில் இந்த தீர்ப்பினை அளித்துள்ள பசுமைத் தீர்ப்பாயம், குடிநீருக்காக நீரை எடுப்பதறகு தடையில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com