சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா?

பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.75.62க்கும், டீசல் லிட்டர் ரூ.71.52
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை தெரியுமா?

பெட்ரோலியப் பொருள்களின் விலை தொடர்ந்து இறங்கு முகத்தில் இருந்து வருகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.75.62க்கும், டீசல் லிட்டர் ரூ.71.52 ஆகவும் இன்று வெள்ளிக்கிழமை (நவ.30) விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலை கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி முதல் வேகமாக உயர்த்தப்பட்டது. இதனால் தில்லியில் பெட்ரோல் விலை கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி லிட்டருக்கு ரூ.87.33 ஆகவும், டீசல் விலை ரூ.79.79 ஆகவும் உயர்ந்தது. அதேவேளையில் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.91.34 ஆகவும், டீசல் விலை ரூ.80.10 ஆகவும் புதிய உச்சத்தை தொட்டது.

இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் மீதான வரியில் ரூ.2.50ஐ மத்திய அரசு குறைத்தது. இதேபோல், பாஜக ஆளும் சில மாநிலங்களும் தாங்கள் விதிக்கும் வரியில் ரூ.2.50ஐ குறைத்தன. இதனால் அக்டோபர் 5 ஆம் தேதி பெட்ரோல்-டீசல் விலை சிறிது குறைந்தது. 

இதேபோல், சர்வதேச சந்தையிலும் பெட்ரோலியப் பொருள்களின் விலை குறையத் தொடங்கியது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் உயரத் தொடங்கியது. இதனால் இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க தொடங்கின.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 39 காசுகள் குறைந்து ரூ.75.62க்கு விற்பனையாகிறது. டீசல் விலையும் லிட்டருக்கு 43 காசுகள் குறைந்து, ரூ.71.52க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 
 
சென்னையில் கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி ரூ.87.33-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 55 நாட்களில் ரூ.11.71 குறைந்து இன்று ரூ.75.621 ஆகவும், டீசல் ரூ.79.79-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில் இதுவரை ரூ.8.27 குறைந்து இன்று லிட்டர் ரூ.71.52-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று ஆறுதலை தந்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com