குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை 

குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் இருவர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 
குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் வீடுகளில் சிபிஐ சோதனை 

சென்னை: குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் இருவர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

தமிழகத்தை உலுக்கி வரும் குட்கா ஊழல் தொடர்பாக கோடவுன் உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் உமாசங்கர் குப்தா, சீனிவாசராவ், மத்திய கலால் துறை அதிகாரி என்.கே.பாண்டியன், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன் ஆகிய 5 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 

இந்நிலையில் குட்கா ஊழல் புகாரில் சென்னையில் மத்திய அரசு அதிகாரிகள் இருவர் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. 

மத்திய வருவாய்த் துறையில் பணியாற்றி வரும்  செந்தில் வளவன் மற்றும் கலால்துறை அதிகாரியான ஸ்ரீதர் ஆகிய இருவர் வீடுகளிலும்தான் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது     

தில்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு சிபிஐ அதிகாரிகள் இந்த சோதனையை முன்னின்று நடத்தி வருகின்றனர். சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ள ஆவணங்கள் குறித்த முழுமையான தகவல்கள் வெளியாகிவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com