தலைவர்கள் கருத்து

நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் அளித்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையில் ஒப்பந்தம் அளித்தது தொடர்பான வழக்கை சிபிஐ-க்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 மு.க.ஸ்டாலின்: நெடுஞ்சாலைத் துறை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலகி சுதந்திரமான ஊழல் விசாரணைக்கு வழி விட வேண்டும். முதல்வர் பதவி விலகாவிட்டால், அவரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
 சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): முதல்வர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்ய வேண்டும். எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்.
 ராமதாஸ் (பாமக): முதல்வர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்றத்தின் ஊழலுக்கு எதிரான தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நெடுஞ்சாலைத் துறை ஊழல்களுக்குப் பொறுப்பேற்று முதல்வர் பதவியிலிருந்து எடப்பாடி பழனிசாமி உடனடியாக விலக வேண்டும்.
 இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): முதல்வர் மீது சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பதால் ஆட்சியாளர்கள் மீதான சந்தேகம் மக்களுக்கு மேலும் வலுத்துள்ளது. முதல்வர் தனது பதவியிலிருந்து விலகி சிபிஐ விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
 ஜி.கே.வாசன் (தமாகா): முதல்வர் மீது சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது ஆட்சியாளர்களுக்கு மாபெரும் இழுக்கு. அரசு மீது மக்களுக்கும் மேலும் சந்தேகம் வலுத்து வருகிறது.
 திருமாவளவன் (விடுதலைச் சிறுத்தைகள்): முதல்வர் பழனிசாமி மீது கூறப்பட்டுள்ள ஊழல் புகார்களை விசாரிக்க சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், முதல்வராக பழனிசாமி நீடிப்பது விசாரணைக்கு தடையாக அமையும். எனவே, தமிழக முதல்வர் தானே முன்வந்து பதவி விலக வேண்டும்.
 டிடிவி தினகரன் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்): தமிழகம் ஊழலில் முதல் மாநிலமாக மாறி வருகிறது. தினமும் ஊழல் புகார்களுக்கு ஆளாவதை ஆட்சியாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com