முதல்வர் மீதான நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

தமிழக முதல்வர் மீதான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் திமுக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 
முதல்வர் மீதான நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் திமுக கேவியட் மனு தாக்கல்

தமிழக முதல்வர் மீதான நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்த முறைகேடு வழக்கில் திமுக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. 

கடந்த 7 ஆண்டுகளாக நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முதல்வர் பழனிசாமி நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறவினர்களுக்கு வழங்கி அவர்கள் ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளார். இதுதொடர்பாக, ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனது புகாரின் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும், சிறப்பு புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் சிபிஐ முடிக்க வேண்டும். புகாரில் முகாந்திரம் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

இதையடுத்து, நெடுஞ்சாலை ஒப்பந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்யுமாறு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திடம் அதிமுக வேண்டுகோள் விடுக்கும் என்று கட்சியின் அமைப்புச் செயலாளர் சி.பொன்னையன் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளர்களைச் சந்தித்து தெரிவித்தார். 

இந்நிலையில், முதல்வர் மீதான நெடுஞ்சாலைத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மேல்முறையீடு செய்யப்பட்டால் எங்கள் தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக சார்பில் இன்று (சனிக்கிழமை) கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com