விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

நெல்லை பாபநாசத்தில் மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புனித நீராடினார். 
விஜய் அரசியலுக்கு வருவதைக் கண்டு சிலர் அஞ்சுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர்

நெல்லை பாபநாசத்தில் மகாபுஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புனித நீராடினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மக்களால் உயர்த்தப்பட்டவர் மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் என்ன தவறு? நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு? இதை நான் அவரது தந்தையாக கூறவில்லை. பொதுமக்களில் ஒருவராக கூறுகிறேன். விஜய், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என தமிழன் என்ற முறையில் விரும்புகிறேன். விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்.

நான் பிறப்பால் கிறிஸ்தவனாக இருந்தாலும் ஹிந்துத்துவத்தை பின்பற்றுகிறேன். இந்தியாவில் பிறந்த அனைவருமே ஹிந்துக்கள் தான். 

ஜாதி, மத வேறுபாடின்றி ஆன்மீகத்தில் ஈடுபடவேண்டும். 100 முறை காசிக்கு சென்றுள்ளேன். கைலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளேன். 144 ஆண்டுக்கு ஒருமுறை கொண்டாடக்கூடிய தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தை அறிவியலுடன் இணைத்தே வகுத்துள்ளனர் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com