அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை: ஆளுநர் மறுப்பு

புதுவை ஆளுநர் மாளிகை எவ்வித ஊழல் முறைகேட்டிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடவில்லை என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தார்.
அதிகார துஷ்பிரயோகம் செய்யவில்லை: ஆளுநர் மறுப்பு

புதுவை ஆளுநர் மாளிகை எவ்வித ஊழல் முறைகேட்டிலும் அதிகார துஷ்பிரயோகத்திலும் ஈடுபடவில்லை என்று துணை நிலை ஆளுநர் கிரண் பேடி சனிக்கிழமை திட்டவட்டமாக மறுத்தார்.
 ஆளுநரின் சிறப்பு அதிகாரியான தேவநீதிதாûஸ மத்திய அரசின் அனுமதியின்றி நியமனம் செய்தும், நீர்நிலைகளை தூர்வார தனியார் நிறுவனங்களுக்கு சிஎஸ்ஆர் திட்டத்தில் ஆளுநர் மாளிகை அழுத்தம் தருவதாகவும் புதுவை முதல்வர் வே.நாராயணசாமி சனிக்கிழமை குற்றஞ்சாட்டியிருந்தார்.
 இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி, ஆளுநர் மாளிகையில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசியதாவது:
 புதுவையில் உள்ள ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் குறைந்தபட்சம் 6 முதல் 15 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. நிதி தட்டுப்பாடு காரணமாக பிரதான பாசன கால்வாய், கிளை காய்வாய்களை பொதுப்பணித் துறையால் தூர்வார முடியவில்லை.
 இந்த நிலையில், "நீர்வளமிக்க புதுச்சேரி' என்ற இலக்குடன் நீர்நிலைகளை தூர்வாரும் பணியை ஆளுநர் மாளிகை மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக நீர்நிலைகளையும், பாசனக் கால்வாய்களையும் தூர்வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சமுதாயச் சிந்தனைமிக்கவர்கள், கொடையாளர்கள், தொழில்நிறுவனங்கள் உதவியுடன் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 யாரையும் கட்டாயப்படுத்தி இப்பணியை மேற்கொள்ள ஆளுநர் மாளிகை வலியுறுத்தவில்லை. இந்தப் பணி நடைபெறும்போது அரசு அல்லது அரசு முகமைகள் மூலமாக எவ்வித பணப்பரிமாற்றமும் நடப்பதில்லை. கொடையாளர்கள், பணியை மேற்கொள்ளும் தன்னார்வ நிறுவனங்கள் இடையே மட்டுமே பணப்பரிமாற்றம் நடக்கிறது.
 எவ்வித நிதிப் பரிமாற்றமும் இல்லாமல் பொதுப்பணித் துறை நீர்நிலைகளை தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறது. சமுதாய பங்களிப்புடன் இதுவரை 25 பாசன கால்வாய்கள் சுமார் 84 கி.மீ. தொலைவுக்கு தூர்வாரப்பட்டுள்ளன. இந்தப் பணியை மேற்கொள்ள ஆளுநர் மாளிகை ஊக்கியாக மட்டுமே செயல்படுகிறது. பணப்பரிமாற்றமே நடைபெறாமல் இருக்கும்போது இதில் ஊழல் நடக்கிறது என்கிற குற்றச்சாட்டை எப்படி ஏற்க முடியும்? குற்றச்சாட்டுகள் குற்றச்சாட்டுகளாக மட்டுமே இருந்து கொண்டிருக்கும்.
 ஆளுநரின் ஆணையர் மற்றும் செயலராக இருந்த ஐஏஎஸ் அதிகாரியான தேவநீதிதாஸ், ஆளுநர் மாளிகையில் பணியைத் தொடர வேண்டும் என்று ஆளுநர் விரும்பினார். இதனால், மத்திய உள்துறை, மாநில நிதித் துறை ஆகியவற்றின் ஒப்புதலுடன் ஆளுநரின் ஆலோசகராக அதாவது ஆளுநரின் சிறப்பு அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 இதற்கான ஆணையை புதுவை அரசின் தலைமைச் செயலர் வெளியிட்டுள்ளார். இதன்படிதான் ஆளுநரின் சிறப்பு அதிகாரியாக தேவநீதிதாஸ் தொடர்கிறார். யூனியன் பிரதேசங்களின் சட்டம் 1963, புதுச்சேரி சட்ட விதிகள் 1963 ஆகியவற்றின்படி பணிகளை நியமிப்பதில் துணை நிலை ஆளுநர் தான் அதிகாரம் பெற்றவர். எனவே, நீர்நிலைகளை தூர்வாரியது, சிறப்பு அதிகாரியை நியமித்ததில் எவ்வித அதிகாரதுஷ்பிரயோகமும் முறைகேடும் நடக்கவில்லை என்றார் ஆளுநர் கிரண் பேடி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com