வேலூர் சிறையில் திடீர் சோதனை: செல்லிடப்பேசிகள் பறிமுதல்

வேலூர் மத்திய சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் இரு செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் சிறையில் திடீர் சோதனை: செல்லிடப்பேசிகள் பறிமுதல்

வேலூர் மத்திய சிறையில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் இரு செல்லிடப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வேலூர் மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 7-ஆம் தேதி கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை பெற்ற சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த இக்பால்மஞ்சூரி, சிறையில் செல்லிடப்பேசி வைத்திருந்தபோது சிக்கினார். இதுதொடர்பாக, பாகாயம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விவகாரம் குறித்து விளக்கம் கேட்டு சிறையின் முதன்மைக் காவலர் உள்பட இருவருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறை வளாகத்தில் சிறைக்காவலர்கள் வெள்ளிக்கிழமை மாலை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 2-ஆவது கண்காணிப்பு கோபுரம் அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்லிடப்பேசி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறை வளாகத்தில் உள்ள பயன்பாடற்ற கழிப்பறையில் இருந்து சனிக்கிழமை மாலை மற்றொரு செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த இரு செல்லிடப்பேசிகளும், எப்படி சிறைக்குள் வந்தன என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் மத்திய சிறைக்குள் சில நாள்களுக்கு முன் 2 செல்லிடப்பேசிகளை கொண்டு செல்ல முயன்றபோது கண்டுபிடிக்கப்பட்டு, கைப்பற்றப்பட்டன. இதையடுத்து, கடந்த 2 வாரங்களில் மொத்தம் 5 செல்லிடப்பேசிகள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com