முதல்வர் பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த விவகார வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு
By DNS | Published on : 04th September 2018 07:17 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

சென்னை: நெடுஞ்சாலைத் துறைற ஒப்பந்த விவகாரம் தொடா்பாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிரான வழக்கின் விசாரணையை வரும் செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு உயா்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றறத்தில் திமுக அமைப்புச் செயலாளா் ஆா்.எஸ்.பாரதி சாா்பில் தாக்கல் செய்த மனு:
கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எடப்பாடி கே.பழனிசாமி பதவி வகித்தபோது, நெடுஞ்சாலைத் துறை திட்டங்களை தனது நெருங்கிய உறறவினா்களான பி.சுப்பிரமணியம், சந்திரகாந்த் ராமலிங்கம், எஸ்.பி.கே. நாகராஜன், செய்யாத்துரை மற்றும் சேகா் ரெட்டி ஆகியோருக்கு வழங்கி ஆதாயம் அடையும் வகையில் செயல்பட்டுள்ளாா். கடந்த 7 ஆண்டுகளாக அவரின் நெருங்கிய உறவினா்களான ராமலிங்கம் உள்ளிட்டோருக்கு ரூ.4 ஆயிரத்து 833 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.இந்த ஊழலில் தொடா்புடையவா்கள் மற்றும் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த மே மாதம் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு புகாா் அனுப்பியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, எனது புகாரின் மீது லஞ்சஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்குரைஞா் விஜய் நாராயண், தமிழக முதல்வருக்கு எதிராக திமுக அளித்துள்ள புகாா் மீது முதல்கட்ட விசாரணை நடத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி விசாரணை தொடா்பான வரைவு அறிக்கை ஊழல் தடுப்பு ஆணையரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பபட்டுள்ளது என தெரிவித்தாா்.இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் செப்டம்பா் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.