இந்திய முறை மருத்துவம்: தரவரிசைப் பட்டியல் எப்போது?

சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது குறித்த அறிவிப்பு சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 


சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது குறித்த அறிவிப்பு சில தினங்களில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 
சித்த மருத்தும், ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இந்திய முறைப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. அதற்கான விண்ணப்ப விநியோகம் கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தொடங்கியது.
இப்படிப்புகளுக்குத் தமிழகத்தில் சென்னை (3 கல்லூரிகள்), திருமங்கலம் (மதுரை), பாளையங்கோட்டை, கோட்டார் (நாகர்கோவில்) ஆகிய இடங்களில் மொத்தம் 6 அரசு கல்லூரிகள் உள்ளன. இந்தக் கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் நடைபெற்றது. இதுதவிர இணையதளத்திலும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
3,600 விண்ணப்பங்கள்: விண்ணப்பத்தைப் பெறுவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கும் புதன்கிழமை கடைசி நாளாகும். தேர்வுக் குழுவுக்கு சுமார் 3,600 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்துள்ளது.
நிகழ் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த பட்டியல் மத்திய ஆயுஷ் அமைச்சகத்திடம் இருந்து இதுவரை வரவில்லை. அனுமதிக்கப்பட்ட இடங்கள் குறித்த விவரங்கள் கிடைத்தவுடன், சில தினங்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com