யோகேந்திர யாதவ் கைது: கமல் கண்டனம்

யோகேந்திர யாதவ் கைது: கமல் கண்டனம்

சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் குறித்து கருத்துக் கேட்க வந்த இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு

சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் குறித்து கருத்துக் கேட்க வந்த இந்திய சுயராஜ்ய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
 இதுதொடர்பாக அவர் கூறியிருப்பது: வெளி மாநிலத்திலிருந்து யோகேந்திர யாதவ் விவசாயிகளிடம் கருத்துக் கேட்க வந்துள்ளார். அவரை தமிழகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது கடும் கண்டனத்துக்குரியது. சட்டத்தைக் காரணம் கூறி, குரல்களே எழாமல் செய்யும் இந்த வேலை சர்வாதிகாரம் என்றே தோன்றுகிறது. இது ஜனநாயக நாடு என்று ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது. மக்கள் தங்கள் கருத்துகளைத் தெளிவாக பயமின்றி எடுத்துச் சொல்லும் சூழல் வேண்டும். அது வரவில்லையென்றால் வரவழைக்க வேண்டும் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com