சீமராஜா' படத்தை இணையத்தில் வெளியிட தடை
By DIN | Published on : 11th September 2018 12:14 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து விரைவில் திரைக்கு வரவுள்ள சீமராஜா' திரைப்படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தாக்கல் செய்த மனுவில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சமந்தா நடித்துள்ள சீமராஜா திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் வெளியிட வாய்ப்பு உள்ளது. இப்படி இணையதளத்தில் திரைப்படத்தை வெளியிட்டால், மிகப் பெரிய அளவில் இழப்பு ஏற்படும். எனவே இந்தப் படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.சுந்தர் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சீமராஜா' திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.