ராஜீவ் கொலை கைதிகள் 7 பேரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்: பழ. நெடுமாறன், நல்லகண்ணு வலியுறுத்தல்

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 27 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் என தமிழர்
செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாôறன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.
செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாôறன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு.


மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 27 ஆண்டுகளாகத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரையும் உடனடியாக ஆளுநர் விடுவிக்க வேண்டும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு ஆகியோர் வலியுறுத்தினர்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை இருவரும் கூட்டாக அளித்த பேட்டி:
ஆர்.நல்லகண்ணு: பேரறிவாளன் உள்பட 7 பேர் 1991-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு இன்று வரை 27 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். அவர்களை விடுதலை செய்யவேண்டும் என பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தி வந்தன. அதற்கேற்ப இப்போது உச்சநீதிமன்றம் முறையான தீர்ப்பை அளித்திருக்கிறது. இதை ஒப்புக்கொண்டு, ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என தமிழக அமைச்சரவையும் தீர்மானம் நிறைவேற்றி, அதைப் பரிந்துரையாக ஆளுநருக்கும் அனுப்பியுள்ளது. அதை ஏற்றுக்கொண்டு 7 பேரையும் ஆளுநர் விடுவிக்க வேண்டும்.
பழ.நெடுமாறன்: இந்த 7 பேரில் முதலில் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையும், 4 பேருக்கு தூக்கு தண்டனையையும் உச் சநீதிமன்றம் விதித்தது. இந்த 4 பேரின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என அப்போது தமிழக ஆளுநராக இருந்த பாத்திமா பீவியிடம் தாக்கல் செய்தபோது, அதை அவர் ஒரே வாரத்தில் தள்ளுபடி செய்து விட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு: இதை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, அரசியலமைப்புச் சட்டத்தின்படி அமைச்சரவை கூடி என்ன பரிந்துரை செய்கிறதோ அதைத்தான் ஆளுநர் ஏற்று செயல்பட வேண்டும் என அப்போதைய மூத்த வழக்குரைஞர் சண்முகம் வாதிட்டார். இதை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும், ஆளுநர் பாத்திமா பீவியின் உத்தரவு செல்லாது என உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் அப்போது தீர்ப்பளித்தார். அதன் பிறகே, அந்த 4 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
எனவே, சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாகும். இந்தத் தீர்ப்புக்குப் பிறகுதான், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மாநிலத்தில் அமைச்சரவை கூடி ஆளுநருக்கும், மத்திய அமைச்சரவை கூடி குடியரசுத் தலைவருக்கும் பரிந்துரைக்கும் நடைமுறை தீவிரமாக செயல்பாட்டுக்கு வந்தது.
எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி, அமைச்சரவையின் முடிவை ஆளுநர் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும். அதன்படி, தமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்று, ஏழு பேரையும் தாமதமின்றி ஆளுநர் விடுவிக்க வேண்டும். அத்துடன் ஏழு பேரும் விடுவிக்கப்பட்ட பின்னர், அவர்களின் மறு வாழ்வுக்கு தமிழக அரசு உதவ வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com