எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை: அரசாணை வெளியீடு
By DIN | Published on : 13th September 2018 03:38 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
பேட்டரி மூலம் செயல்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்படும்' என்று சட்டப்பேரவையில் ஜூன் 14 -ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அறிவித்தார். இதையடுத்து, செப்டம்பர் மாதம் முதல் இந்தத் தடை அமலுக்கு வரும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு புதன்கிழமை அரசாணை வெளியிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், காவல், கல்வி மற்றும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த 68,000 -க்கும் மேற்பட்டோருக்கு புகையிலை தொடர்புடைய பொருள்களை ஒழிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.