விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது.
விநாயகர் சதுர்த்தி: கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு


விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்தது.
விநாயகர் சதுர்த்தி வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொது மக்கள், ஹிந்து அமைப்புகள் சார்பில், வீடுகள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூக்களால் அலங்காரம் செய்து சிறப்புப் பூஜை செய்யப்படுவது வழக்கம். இதற்காக சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள பூ விற்பனைச் சந்தையில் பூக்கள் வாங்க வியாழக்கிழமை அதிகாலை 4 மணி முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கிலோ ரூ. 750-க்கு விற்பனைக்கு செய்யப்பட்டு வந்த மல்லி வியாழக்கிழமை ரூ. 1,350, ரூ. 500-க்கு விற்கப்பட்டு வந்த முல்லை ரூ.1,000-க்கும் விற்கப்பட்டது.
மற்ற பூக்களின் விலை விவரம் (கிலோ) வருமாறு:
பன்னீர் ரோஸ் - ரூ. 200
சாக்லெட்ரோஸ் - ரூ. 150
மல்லி - ரூ. 1,350
முல்லை - ரூ. 1,000
சாமந்தி - ரூ. 180
சம்பங்கி - ரூ. 250
கனகாம்பரம் - ரூ. 700
அரளி - ரூ. 250
ஜாதிமல்லி - ரூ. 500
விலை உயர்வு ஏன்?: பூக்கள் விலை உயர்வு குறித்து வியாபாரிகள் அருள் விசுவாசம், சிவா உள்ளிட்டோர் கூறியது:
கோயம்பேடு சந்தைக்கு ஒசூர், நிலக்கோட்டை, மதுரை, வேலூர் பகுதிகளில் இருந்து தினமும் 12 முதல் 15 லாரிகளில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. வியாழக்கிழமை விநாயகர் சதுர்த்தி என்பதால் கடந்த 3 நாள்களாக 25 முதல் 30 லாரிகளில் பூக்கள் கொண்டுவரப்பட்டன. வரத்து அதிகமாக இருந்தாலும் சிறப்புப் பூஜைகள், அலங்காரங்களுக்காக பூக்களின் தேவை அதிகமாக இருந்ததால் விலையும் உயர்ந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com