வெடி விபத்தில் மூவர் உயிரிழந்த வழக்கில் இருவர் கைது

ஈரோட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மூவர் உயிரிழந்தது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர் உள்பட இருவரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். 


ஈரோட்டில் பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் மூவர் உயிரிழந்தது தொடர்பாக பட்டாசு விற்பனையாளர் உள்பட இருவரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர். 
ஈரோடு, சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார் (52). இவரது மகன் கார்த்திக் (30). இவர்கள், தீபாவளிப் பண்டிகைக்காக வளையக்கார வீதியில் உள்ள மளிகைக் கடையின் முன்பு தற்காலிகமாகப் பட்டாசுகள் விற்பனை செய்வது வழக்கம். 
இந்நிலையில், வாங்கி வரப்பட்ட பட்டாசுகளை வாகனத்தில் இருந்து இறக்கும்போது வெடித்துச் சிதறியதில் கார்த்திக், சூரம்பட்டி அணைக்கட்டைச் சேர்ந்த முருகன் (40), சுத்தானந்தன் நகரைச் சேர்ந்த வாகன ஓட்டுநர் செந்தூரப்பாண்டி (50) ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து, ஈரோடு சூரம்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு சுகுமாரிடம் விசாரணை நடத்தினர். 
அதில், உயிரிழந்த முருகன் ஈரோட்டை அடுத்துள்ள அறச்சலூர், வடுகபட்டியைச் சேர்ந்த தங்கமுத்து (48) என்பவரிடம் பட்டாசு வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல் துறையினரின் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனையில் ஈடுபட்ட சுகுமார், தடை செய்யப்பட்ட பட்டாசு ரகங்களை விற்பனை செய்த தங்கமுத்து ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். 
மேலும், தடை செய்யப்பட்ட பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தங்கமுத்துவின் பட்டாசு கிடங்குக்கும் சீல் வைக்க மாவட்ட நிர்வாகத்துக்குக் காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com