3 ஆண்டுகளுக்குப் பிறகு சுருளி அருவியில் செப்.23, 24-இல் சாரல் விழா

தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சாரல் விழா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
3 ஆண்டுகளுக்குப் பிறகு சுருளி அருவியில் செப்.23, 24-இல் சாரல் விழா


தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் சாரல் விழா, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 23, 24-ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.

தேனி மாவட்ட சுற்றுலாத் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சுருளி அருவியில் சாரல் விழா நடைபெறும். இவ்விழா கடைசியாக கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்றது. 2015-ஆம் ஆண்டு முதல் சுருளி அருவிக்கு வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளிடம் வனத் துறை மூலம் கட்டணம் வசூலிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஆண்டு சாரல் விழா நடைபெறவில்லை. அதையடுத்து கடந்த 2016-ஆம் ஆண்டு சுற்றுலாத் துறை சார்பில் சுருளி அருவியில் சாரல் விழா நடத்துவதற்கு பதிலாக, வைகை அணையில் வைகைப் பெருவிழா நடைபெற்றது.
கடந்த ஆண்டு எந்த விழாவும் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு பின், தற்போது வரும் 23, 24 ஆகிய தேதிகளில் சுருளி அருவியில் சாரல் விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இதற்கான விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் தலைமையில் சுற்றுலாத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், சாரல் விழா கொண்டாடுவது குறித்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com