7 பேர் விடுதலை: மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கவில்லை என்று தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
7 பேர் விடுதலை: மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பவில்லை என ஆளுநர் மாளிகை விளக்கம்


சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பி வைக்கவில்லை என்று தமிழக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் முடிவெடுக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. 7 பேர் விடுதலை குறித்து முடிவெடுக்குமாறு ஆளுநர் பன்வாரிலாலுக்கு பரிந்துரையும் செய்திருந்தது.

இந்த நிலையில், 7 பேர் விடுதலை குறித்து அறிக்கை தயாரித்து, அதனை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ஆளுநர் பன்வாரி லால் அனுப்பி வைத்ததாக செய்திகள் வெளியாகின.

ஆனால், அவ்வாறு எந்த அறிக்கையையும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கவில்லை என்று ஆளுநர் மாளிகை வெளியிட்ட விளக்க அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் அந்த விளக்க அறிக்கையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை குறித்து எந்த அறிக்கையும் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கவில்லை. சில ஊடகங்கள் அதுபோன்ற தவறான தகவலை வெளியிட்டு விவாதமும் நடத்தி வருகிறது.

7 பேரை விடுதலை செய்வது குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் மற்றும் அமைச்சரவையின் பரிந்துரை ஆவணங்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்துள்ளன. இந்த வழக்கு மிகவும் சிக்கலானது. எனவே, தேவையான ஆலோசனைகள் நடத்தப்பட வேண்டியது உள்ளது. அரசியல் சாசனப்படி, நியாயமான, நேர்மையான முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com