கருத்து சுதந்திரத்தை மீட்டெடுக்க வேண்டும்
By சென்னை, | Published on : 16th September 2018 01:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ஜனநாயக உரிமை நாள் கடைப்பிடிக்கும் நிலையில், கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுக்க அனைவரும் போராட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை தமது சுட்டுரையில் பதிவில் கூறியிருப்பது:
சர்வதேச ஜனநாயக உரிமை நாளில் (செப்.15) அரசியலமைப்புச் சட்டம் நமக்கு அளித்துள்ள சுதந்திரத்தையும், உரிமைகளையும் பாதுகாக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
சமூக ஆர்வலர்களை அடக்குவதற்கும், ஜனநாயக உரிமைகளை நீர்த்துப் போகச் செய்வதற்கும் தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான போராட்ட உணர்வை அனைவரும் புதுப்பிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.