ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
By DIN | Published on : 16th September 2018 04:53 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

புதுக்கோட்டை விநாயகர் ஊர்வலத்தில் நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மோசமான வார்த்தைகளால் விமரிசித்த ஹெச்.ராஜா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யாபுரம் கிராமத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா போலீஸாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வாக்குவாதத்தில் காவல்துறையில் ஊழல் நடைபெறுவதாகவும், உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசினார். இந்த விடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, ஹெச்.ராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசுகையில், "நான் நீதிமன்றத்தை மதிப்பவன், அந்த விடியோவில் நான் பேசுவதை யாரோ எடிட் செய்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள்" என்றார்.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு, போலீஸாரை அவதூறாக பேசியது உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.