அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

அண்ணா சிலைக்கு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

அண்ணாவின் 110-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
 அண்ணாவின் பிறந்த நாளையொட்டி மெரீனாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர், வள்ளுவர் கோட்டம் அருகில் உள்ள அண்ணாசிலைக்கு மலர் தூவி ஸ்டாலின் மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவைத் திமுக குழுத் தலைவர் கனிமொழி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, தயாநிதிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 தேமுதிக தலைமை அலுவலகத்தில்...: கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக் கட்சியின் மாநிலத் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் அண்ணா உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி உள்பட பல்வேறு நிர்வாகிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 பெரும்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், சமத்துவ மக்கள் கழக நிறுவனர் ஏ.நாராயணன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com