அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் நாளை முதல் டோக்கன் நடைமுறை: பதிவுத் துறை தலைவர் அறிவிப்பு

தமிழகத்திலுள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் டோக்கன் நடைமுறை திங்கள்கிழமை (செப். 17) முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் வீதம் வழங்கப்பட உள்ளன.

தமிழகத்திலுள்ள 575 சார் பதிவாளர் அலுவலகங்களிலும் டோக்கன் நடைமுறை திங்கள்கிழமை (செப். 17) முதல் அமலுக்கு வருகிறது. ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகத்திலும் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் வீதம் வழங்கப்பட உள்ளன.
 இது குறித்து பதிவுத் துறை தலைவர் ஜெ.குமரகுருபரன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-சார்-பதிவாளர் அலுவலகத்துக்கு வரும் மக்களின் கூட்டமும், ஒழுங்கற்ற சூழலை ஒழுங்குபடுத்தவும் ஆவணங்கள் முன் பதிவு செய்ய டோக்கன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 51 சார்பதிவாளர் அலுவலகங்களில் இந்த முறை அண்மையில் செயலாகத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, வரும் திங்கள்கிழமை முதல் அனைத்து அலுவலகங்களுக்கும் இது விரிவுபடுத்தப்படுகிறது.
 எப்போது, எப்படி பெறலாம்? டோக்கன்களை முன்கூட்டியே பெற 30 நாள்களுக்கு முன்பிருந்தே முன்பதிவு செய்யலாம். ஒரு நாளில் முன்பதிவு செய்த டோக்கன்களை வரிசைக்கிரமமாக முதலில் வருவோருக்கு முதல் சேவை என்ற முறையில் ஆவணப்பதிவு செய்யலாம்.
 காலை 10 மணி முதல் 1 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் தலா 10 டோக்கன்கள் வீதம் 30 டோக்கன்கள் அளிக்கப்படும். பிற்பகல் 1 முதல் 1.30 மணி வரை 5-ம், பிற்பகல் 2 முதல் 3 வரை 10-ம், பிற்பகல் 3 முதல் 3.30 மணி வரை 5-ம் என ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்திலும் நாளொன்றுக்கு 50 டோக்கன்கள் அளிக்கப்படும்.
 முன்பதிவு செய்த நபர் குறித்த நேரத்தில் வராத நிலையில், பதிவுக்கான நபர் வரவில்லை என்ற விவரம் கணினியில் காட்டப்படும். அதனைத் தெரிவு செய்த பிறகே அடுத்த ஆவணப் பதிவைத் தொடர முடியும். வரிசைக்கிரமமாக எடுத்து மட்டுமே ஆவணப் பதிவைத் தொடர முடியும் என்ற வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 குறிப்பிட்ட நாளில் அனைத்து முன்பதிவு டோக்கன்களுக்குரிய பதிவு நடைமுறை விரைவாக முடிவுற்ற நிலையில் நேரம் இருந்தால் அடுத்த நாளில் முன்பதிவு செய்த டோக்கன்களை எடுத்து பதிவு நடைமுறையைத் தொடரலாம் என்று பதிவுத் துறை தலைவர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com