ஏழு பேர் விடுதலையில் உரிய நேரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார்

ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
ஏழு பேர் விடுதலையில் உரிய நேரத்தில் ஆளுநர் முடிவெடுப்பார்

ராஜீவ் கொலை குற்றவாளிகள் ஏழு பேரின் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் உரிய நேரத்தில் நல்ல முடிவை எடுப்பார் என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
 அண்ணா பிறந்த தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: அரசமைப்புச் சட்டம் 161-ஐ பொருத்தவரை மாநில அரசுக்கே அதிகாரம் உண்டு. மாநில நிர்வாகத்தின் தலைவர் ஆளுநர் ஆவார். அவர் அமைச்சரவை, சட்டப் பேரவையில் இயற்றப்படும் மசோதா, முடிவுகளுக்கு தனது இசைவைத் தந்தே ஆக வேண்டும். அரசமைப்புச் சட்டத்தில் உள்ள விஷயங்கள் தெளிவாக உள்ள நிலையில், அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
 ஏழு பேரின் விடுதலை விஷயத்தில் தமிழகம் மற்றும் உலகத் தமிழர்களின் ஏகோபித்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது. அமைச்சரவை என்பது தனிநபர் அல்ல. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்வாகும். அந்த உணர்வைத் தான் வெளிப்படுத்தியுள்ளோம். அது ஆளுநருக்குச் சென்றுள்ளது. உரிய நேரத்தில் தமிழர்கள் எதிர்பார்க்கும் முடிவை எடுப்பார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்றார் அமைச்சர் டி.ஜெயக்குமார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com