கண்காணிப்பு கேமரா: விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு

சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில், கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
கண்காணிப்பு கேமரா குறித்த விழிப்புணர்வு குறும்பட சி.டி. வெளியிட்டு விழாவில், நடிகர் விக்ரமுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.
கண்காணிப்பு கேமரா குறித்த விழிப்புணர்வு குறும்பட சி.டி. வெளியிட்டு விழாவில், நடிகர் விக்ரமுக்கு நினைவுப் பரிசு வழங்குகிறார் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன்.


சென்னை பெருநகர காவல் துறையின் சார்பில், கண்காணிப்பு கேமரா அமைப்பது தொடர்பான விழிப்புணர்வு குறும்படம் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னையில் குற்றங்களை தடுக்கவும், குற்றங்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கைது செய்யவும் கண்காணிப்பு கேமராக்கள் போலீஸாருக்கு பெரிதும் உதவி வருகின்றன. எனவே, சென்னை மாநகர் முழுவதும் பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வலியுறுத்தி வருகிறார். இதற்காக, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆகஸ்ட் மாதம் 4 -ஆம் தேதி நடிகர் விவேக் நடித்த மூன்றாவது கண்' குறும்படம் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், மூன்றாவது கண் விழிப்புணர்வு குறும்படத்தின் இரண்டாவது பகுதி வெளியிட்டு விழா, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த குறும்படத்தில் நடித்த நடிகர் விக்ரம், விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் குறும்பட சி.டி.யை வெளியிட, அதை நடிகர் விக்ரம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் ஏ.அருண், மகேஷ்குமார் அகர்வால், ஆர்.தினகரன், ஏ.அருண்(போக்குவரத்து), எம்.டி.கணேசமூர்த்தி, மாநில குற்ற ஆவண காப்பக பிரிவு ஐ.ஜி. எம்.சி.சாரங்கன், இணை ஆணையர் டி.எஸ்.அன்பு, துணை ஆணையர் ஆர்.திருநாவுக்கரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com