மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும்: மு. தம்பிதுரை

மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும் என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை. 

News image
Updated On :26 பிப்ரவரி 2019, 12:51 am IST


மக்களவைத் தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும் என்றார் மக்களவை துணைத் தலைவர் மு. தம்பிதுரை. 
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றிய பகுதிகளான அமையபுரம், நல்லாம்பிள்ளை, அணியாப்பூர் உள்ளிட்ட 19 ஊராட்சிகளைச் சேர்ந்த 48 கிராமங்களில் திங்கள்கிழமை 2 ஆம் கட்ட மக்கள் சந்திப்பு பயணத்தின்போது அவர் மேலும் கூறியது:  
ஸ்டாலின் தான் தளபதி என்றும், வைகோ போர்வாள் எனக் கூறியதற்கு கூட்டணி தொகுதி ஒதுக்கீட்டுக்கு பிறகு, போர்வாள், தளபதி இருப்பார்களா எனத் தெரியும். 
பாஜக மிரட்டி கூட்டணி வைத்துள்ளதாக சிதம்பரம் கூறியதற்கு, மத்திய அரசு அவர் மீது எடுத்துள்ள நடவடிக்கையால் பேசுகிறார். கமலுக்கு வாழ்த்து சொல்லிய ரஜினி குறித்து பேசுகையில் ரஜினி அனைவருக்கும் வாழ்த்து சொல்லுவார். 
மேலும் பாஜக, அதிமுக கூட்டணியில் தலைமை யார் என்ற கேள்விக்கு, கூட்டணியின் தலைமை குறித்து போகப்போகத் தெரியும். கூட்டணி தலைமை என்பது மாநிலத்திற்கு மாநிலம் மாறும்.
இங்கு அதிமுக கூட்டணியில் கட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க காட்சிகள் மாறும் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.