ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால் மகிழ்ச்சி; வராவிட்டால்.. ஜெயக்குமார்

அதிமுகவில் கூட்டணிக் கதவு திறந்தே இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

News image
Updated On :25 பிப்ரவரி 2019, 11:14 am IST

சென்னை: அதிமுகவில் கூட்டணிக் கதவு திறந்தே இருக்கிறது. அந்த வகையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

திருவான்மியூரில் உள்ள அரசுப் பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வந்தால மகிழ்ச்சி; வராவிட்டால் கவலையில்லை என்று கூறினார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கோபத்தின் விரக்தியில் இருக்கிறார். இது ஒரு கட்சிக்கு  தலைவராக இருப்பவருக்கு அழகல்ல.
 
ராஜீவ் வழக்கில் தண்டனை பெற்ற 7 பேர் விடுதலை தொடர்பான மனுவை ஆளுநர் பன்வாரிலால் இதுவரை நிராகரிக்கவில்லை.

கூட்டணியின் கதவு திறந்தே இருக்கும். அந்த வகையில் யார் வேண்டுமானாலும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் ஜெயக்குமார் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.