ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கொடநாடு விவகாரம்: முதல்வருக்கு எதிராக ஆதாரமற்ற ஆவணங்களை வெளியிடத் தடை

கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக ஊடகங்கள், பொது வெளியில் பேசக்கூடாது எனவும் ஆதாரமற்ற ஆவணங்களை

Updated On :24 ஜனவரி 2019, 1:33 am IST


கொடநாடு கொலை விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக ஊடகங்கள், பொது வெளியில் பேசக்கூடாது எனவும் ஆதாரமற்ற ஆவணங்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நுழைந்த மர்ம கும்பல் அங்கிருந்த காவலாளியைக் கொலை செய்துவிட்டு கொள்ளயில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சயன், மனோஜ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கொடநாடு கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த நிலையில், கொடநாடு சம்பவம் தொடர்பாக தெஹல்கா பத்திரிகையின் ஆசிரியர் மாத்யூ சாமுவேல் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த ஆவணப்படத்தில் ஜாமீனில் வெளியே வந்துள்ள சயன் மற்றும் மனோஜ் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக சில கருத்துகளைத் தெரிவித்தனர். 
இந்த நிலையில், கொடநாடு சம்பவத்தில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுக்களைக் கூறி தனக்கு எதிராக அவதூறு பரப்பி வரும் மேத்யூ சாமுவேல் உள்ளிட்ட 6 பேரிடம் ரூ.1.10 கோடி நஷ்டஈடு கோரி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என நீதிபதி கே.கல்யாணசுந்தரத்திடம், மூத்த வழக்குரைஞர் சதீஷ் பராசரன் முறையீடு செய்தார். அதன்படி புதன்கிழமையன்று இரவு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது. 
வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்டுள்ள மேத்யூ சாமுவேல், ஜிபின் பொலியன் குடான், சிஜியா அனில், ஷிவானி, ராதாகிருஷ்ணன், சயன், மனோஜ் ஆகிய 7 பேரும் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராக ஊடகங்கள் மற்றும் பொது வெளியில் பேசக்கூடாது. மேலும் ஆதாரமற்ற ஆவணங்களை வெளியிட இடைக்காலத் தடை விதித்து விசாரணையை வரும் ஜனவரி 30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.